பெண்

பெண்
பெண்ணே அறிந்துக் கொண்டேன் , இயல்பை அழகு என்பேன்

Monday, 15 May 2017

பெயர் ஒன்றை சூட்டிவிடு நம் உறவுக்கு

                போராட்டக் களத்தில் என் மனம்.  வேளுக்கும் வீச்சுக்கும் நடுவில். காதலுக்கும் நட்புக்கும் மத்தியில்.  என்ன நான் செய்வது ?  விடைத் தெரிந்திட ஆவல்.... என் மனதில் காதல் என்று சொல்வதற்கு முன்,  உன்மீதெனக்கு  அளவில்லாத பாசமும் பற்றும் எனலாம்.   எப்படி வார்த்தையில் புகுத்துவது ? பிறக்காதக் குழந்தை மீது தாய் கொண்டிருக்கும் பாசத்தைப் போல, பிறக்காத நம் காதல்  மீது நான் கொண்டிருக்கும் பாசம் போல என உவமைப் படுத்தியும் தராசு சமமாக இல்லை, ஒப்பீடு செய்ய.... என் காதல் இன்னும் வலிமையானதோ .....?


           என் மனதில் காதல்தான், உன் மனதில் என்னவென்று  உரக்கக் கேட்டிட  ஆசை. தடுக்கிறது பெண்மை என்னை .  பெண்மை என்று மட்டும்  சொல்லி, பொய் உரைக்க நான் விரும்பவில்லை.  கொஞ்சம் கர்வமும்தான். கர்வம் என்று நான் சொல்ல முற்படுவது, பெண் திமிரோ , ஆணவமோ இல்லை. நாணம் கலந்த ஒரு பய உணர்வெனலாம்.... என்னத்தான் காதல் கொண்டாலும், பெண்ணாகிய நான் முதலில் காதலை எப்படிச் சொல்வது?  ஒரு வேளை, நீ என்னை மறுத்துவிட்டால் ? என் காதலை காலடியில் போட்டு மிதித்து விட்டால் ? என் உணர்வை நீ உதறிவிட்டால் ? என் காதலை நீ காமமாக எண்ணிவிட்டால் ? என்ன நான் செய்வது ? தூள் தூளாய் நொறுங்கிப் போவேன்... நான் உன்மேல் கொண்ட காதலை யாராலும், ஏன் உன்னாலும் கூட உணர முடியாது.....

                         
               பெண்கள் பெரும்பாலும் முதலில் காதலை ஆணிடத்தில் சொல்லாததற்கு ஒரே ஒரு காரணம்தான். காதலன் அதனை மறுத்துவிட்டால் என்ன செய்வதென்பதே ஆகும்.  அப்படி மறுத்தாலும் சிறு வலியை மட்டும்தான் கொடுக்கும். மாறாக, தன்  காதலை எள்ளி நகையாடிவிட்டால் போதும், பெண்களால் அதனை ஏற்க இயலாத நிலை. ஏற்கும் பக்குவமும், மன திராணியும் இன்னும் பெண்களிடத்தில் வரவில்லை. முக்கியமாக எனக்கு.... உள்ளுணர்வைத் திரட்டி, காலடியில் வைக்கும் பட்சத்தில், காதலன் அதனை எட்டி உதைப்பது நியாயமா ? உண்மையாகக் காதலிக்கும் எந்த ஒரு பெண்ணுக்கும் மரண வலியைத்தான் கொடுத்திருக்கும்.... பெண்களுக்கு காயம் என்பது ஆழமானதாகும். ஏனென்று தெரியுமா ?  அவர்களின் அன்பும் ஆழமானது. அதனால்தான்... நானும் அந்த வலியினை ஏற்க்கத் தயாராய் இல்லை, அந்த வலி நீ தந்ததாக இருந்தால்...


                   ஒரு பூவினோடு ஒரு வாசம் தானே அன்பா.... ஒரு காதல் அது உன்னோடுதான். ஒரு வாழ்வு அது உன்னோடுதான். வெறும் வாய் வார்த்தையன்று இது.  உயிர் கொண்டிருக்கும் ஜீவனின் வாக்குமூலம். எங்கிருந்து வந்தது காதல் .... ? எதனால் உன்மீதெனக்கு?  அழகாளால், ஆற்றலாலா?  எதுவுமே இல்லை.  வெளித்தோற்றத்தைக் கொண்டு காதல் கொள்ளும் அற்ப பிறவி நானன்று அன்பா :)  எந்த ஆணையும் கண் பார்த்து பேசியதில்லை, நெருங்கி நின்றதுமில்லை, வேறொரு உறவு கொண்டு பார்த்ததுமில்லை, உன்னைத்தவிர.  ஏதோ உன்னிடம்.  நாம் பரிட்சையாமனவர்கள் அன்று அன்பா.... துளையிடும் உன் பார்வை, பொய்யில்லை அதில்.  அதுவே நீ....


                   இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா என்று ஆண்கள் யோசிக்கலாம்.. பொதுவாகப் பெண்கள் ஏமாற்றுக்காரர்கள், பணத்திக்காக காதலிப்பவர்கள் என்பதை கடந்துப் பார்த்தல் மட்டுமே, இதுப்போன்ற மனம் கொண்ட பெண்களும் உள்ளனர் என்பதை அறிய முடிகிறது...  என் காதலும் அப்படித்தான், உன் கண் வழிப் பார்த்தால் மட்டுமே, என் காதல் புரியும்.... எனக்கான பாதை உன் வீட்டில்தான் முடிய வேண்டும், அன்பா... விடை அறியாமலேயே விடைக்கொடுக்கிறேன், அதனால் (விரைவில்) பெயர் ஒன்றை சூட்டிவிடு நம் உறவுக்கு .....


***தள்ளாடும் வயதில் தளராத அன்பு, காதல் 💛


         

7 comments:

  1. ஒரு பெண் மனதை ஒரு பெண்ணால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடியும் என்பார்கள். அதனை இப்போது இக்கதையைப் இரசித்தவுடன் நான் உணர்கிறேன். "மொட்டு விட்ட முதல் பூவை யார் பறித்தார்". இதை படித்தவுடன் இந்த வரிதான் என் ஞாபகத்தில். வாழ்க உன் சிறுகதை தொடர் பயணம் தோழி.

    ReplyDelete
    Replies
    1. உனக்கும் பிடித்ததில் எனக்கு அளப்பரிய இன்பம் தோழி:) ஏதோ நான் கண்ட உணர்ந்தவற்றின் பகிர்வுதான் இது. எனக்கும் அந்த பாடல் என்றால் கொள்ளை இஷ்டம் தோழி. அருமையான காட்சிகளும் வரிகளும் அதில்... மீண்டும் நன்றி தோழியே

      Delete
  2. கல்லை செதுகியது போல் ஒரு பெண்னின் உணர்வுகளை மற்றும் காதலை அழகாக இந்த சிறுகதையில் செதுகியுள்ளிர்கள் தோழி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி. உங்களின் ஆதரவுக்கு மிக்க நன்றி, உங்களின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு எனது அடுத்த படைப்பு கண்டிப்பாக அமையும்

      Delete
  3. ஒரு பெண்ணின் மனதை இவ்வளவு ஆழமாக தெரிந்து வைத்திருக்க பெண்னே. உமது சிறுகதையைப் படித்த நான் அந்த நிலையில் என்னை வைத்து கற்பனை செய்து பார்க்கும் அளவிற்கு இச்சிறுகதை அமைந்திருந்தது. எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. இங்கு சொல்லும் எத்தனைக் காதல்கள் சொர்கத்தில் சேருகிறது? நிலைக்கிறது? இங்குப் பெறுவதைவிட, கொடுக்கும் அன்பின் தூய்மை வலியது.

      Delete